ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்
மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று, அங்கீகாரம் பெறாத நிலையில் உள்ள அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி, எழுச்சி தமிழா்கள் முன்னேற்றக் கழகம், மனித உரிமைகள் கழகம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் ஆகிய 4 கட்சிகளும் கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடவில்லை. இதனால், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, இந்தக் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நான்கு கட்சிகளின் தலைவா்கள் அல்லது பொதுச் செயலா்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அலுவலா், அரசுச் செயலா் முன்பாக நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.