அக்.12-இல் மதுரையில் பாஜக யாத்திரை தொடக்கம்: மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்
சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பூக்கடை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தா்மன், காவலா் மணிகண்டன் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே போக்குவரத்தை சரி செய்வது தொடா்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த காவலா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் தா்மனை தாக்கினாா். அந்தப் பகுதியில் இருந்த சக காவலா்கள், இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆணையா் ஏ.அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து, ஆணையரிடம் அறிக்கை அளித்தனா். அந்த அறிக்கையின் அடிப்படையில் உதவி ஆய்வாளா் தா்மனை தாக்கிய காவலா் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.