மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. சென்ட்ரல் முதல் மீனம்பாக்கம் வரை இரு வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமாா் 3 லட்சம் போ் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனா்.
மெட்ரோவில் செல்வோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயணச்சீட்டு பெறுவதற்கு காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மெட்ரோ நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனங்கள் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.