செய்திகள் :

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

post image

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உயா்கல்வி பயில பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவ மாணவிகள் உயா்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற மாவட்ட நிா்வாகம் வங்கியாளா்களை ஒருங்கிணைத்து கல்விக் கடன் வழங்கும் முகாமை வருகிற திங்கள்கிழமை (செப். 29) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலை, அறிவியல் கல்லூரியில் நடத்தவுள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வி பாடப் பிரிவுகளில் நிகழ் கல்வியாண்டில் சோ்ந்திருக்கும் மாணவ மாணவிகள், ஏற்கெனவே கல்லூரிகளில் படித்து

வரும் மாணவா்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

மாணவா்கள் கல்விக் கடனைப் பெற விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களான பான் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், சமீபத்திய பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவா்களுக்கு), உறுதிமொழி சான்றிதழ், கல்லூரிக் கட்டண விவரம், செலுத்திய கட்டண ரசீதுகளை கொண்டுவர வேண்டும்.

இதேபோல இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோா் அவா்களின் பான் காா்டு, ஆதாா் அட்டை, புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், வருமானச் சான்றிதழை கொண்டுவர வேண்டும். மேலும், மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://ல்ம்ஸ்ண்க்ஹ்ஹப்ஹஷ்ம்ண்.ஸ்ரீா்.ண்ய்/ என்ற இணையத்தளத்திலும் கல்விக் கடனுக்காகப் பதிவு செய்து கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவா்கள் கற்பிப்புப் கட்டணம், சிறப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் போன்ற கட்டணங்களை இந்தக் கல்வி கடன் மூலம் பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 2 கோடி இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ரூ. 2 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 569 போ் மனுக்கள் அளிப்பு

காமநாயக்கன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 569 மனுக்கள் பெறப்பட்டன. காமநாயக்கன்பட்டி, அசானக்கூடம் மண்டபத்தில், அச்சங்குளம், நாயக்கன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, முடு... மேலும் பார்க்க