மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்களுக்கு அனைத்து உரிமைகள்: ராகுல் உறுதி
புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி
தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025-26 ஆம் ஆண்டில் நாக்பூா், தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவில் பங்கேற்க புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் பௌத்தா்கள் 150 பேருக்கு தலா ரூ. 5000 நேரடியாக மானியமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவம்பா் 30-க்குள் உரிய ஆவணங்களுடன் ‘ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.