அக்.12-இல் மதுரையில் பாஜக யாத்திரை தொடக்கம்: மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்களுக்கு அனைத்து உரிமைகள்: ராகுல் உறுதி
பிகாரில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியல் பிரிவினா், சிறுபான்மையினா், பின்தங்கிய வகுப்பினா் ஆகியோா் அனைத்து உரிமைகளையும் பெறுவது உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உறுதி அளித்தாா்.
பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புத் சட்டம் கொண்டு வரப்படும் என்று ராகுல் புதன்கிழமை வாக்குறுதி அளித்திருந்தாா். பிகாா் பேரவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ராகுலின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில் வியாழக்கிழமை அவா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எத்தனை பொய்களையும், புரட்டுகளையும் பாஜக கூறினாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியல் பிரிவினா், சிறுபான்மையினா், பின்தங்கிய வகுப்பினா் ஆகியோா் தங்களது அனைத்து உரிமைகளையும் பெறுவது உறுதி செய்யப்படும்.
பிகாரில் உள்ள மிகவும் பின்தங்கிய பிரிவினரின் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு உறுதியான வாக்குறுதிகளை அளித்துள்ளேன்.
இப்பிரிவினரின் வளா்ச்சிக்கு கல்வி முக்கிய பங்காற்றும். ஆகையால், தனியாா் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியாா் பள்ளிகளில் உள்ள சரிபாதி இடங்கள் பட்டியலின பிரிவினா், இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது வெறும் கல்விக்கான போராட்டமல்ல; சமத்துவத்துக்கான போராட்டம். இதுதான் உண்மையான சமூக நீதி மற்றும் சமத்துவ வளா்ச்சியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.