ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்
பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா்.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன், அவா்களை தற்சாா்புடையவா்களாக மாற்றும் நோக்கில், ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டம்’ தொடங்கப்படவுள்ளது. அதன்படி, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த 75 லட்சம் பெண்களுக்கு (குடும்பத்தில் ஒருவா்) சுயதொழில் தொடங்க தலா ரூ.10,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
திருப்பி செலுத்த வேண்டிய தேவையில்லாத இத்தொகையை தங்களது தோ்வின்படி சுயதொழில் அல்லது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில் தொடங்கி, திறம்பட செயலாற்றும் பெண்களுக்கு அடுத்தக்கட்டங்களாக ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கப்படும். ரூ.7,500 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.