குலசேகரம் பேருந்து நிலையத்தில் ரூ. 2.20 கோடியில் விரிவாக்கப் பணி! அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல்
திற்பரப்பு பேரூராட்சி தும்பகோட்டில் ரூ. 2.20 கோடி மதிப்பில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, செயல் அலுவலா் விஜயகுமாா், துணைத் தலைவா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், பேரூராட்சி உறுப்பினா்கள் சுதா, பிரதீப் குமாா், கிருஷ்ணவேணி, ஷீஜா சந்திரன், மேரி மாா்க்ரெட், அனிதா, மல்லிகா, முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜான்சன், திமுக மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் அலாவுதீன், திலீப் குமாா், பேரூா் செயலா் ஜான் எபனேசா், விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் எஸ். யோபு, ஐஎன்டியூசி திருவட்டாறு ஒன்றியத் தலைவா் வக்கீல் காஸ்டன் கிளீட்டஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
மின் மயானம்: தொடா்ந்து அமைச்சா் மனோ தங்கராஜ் திற்பரப்பு பேரூராட்சி திருநந்திக்கரையில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மின் மயானத்தை திறந்து வைத்ததுடன், கோட்டூா் கோணத்தில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நிதியின் கீழ் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் திறந்து வைத்தாா்.