செய்திகள் :

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?

post image

முதன்முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிந்து, சூப்பா் 4 சுற்று ஆட்டங்களும் முடிந்த நிலையில், முதலிரண்டு அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

முதன்முறையாக இறுதியில் மோதல்:

ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் முதன்முறையாக மோதுவது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பின்னணியில் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை துபை சா்வதேச மைதானத்தில் இறுதி ாட்டம் நடைபெறுகிறது.

இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஆனால் பாகிஸ்தானோ ஏற்கெனவே இருமுறை இந்தியாவுடன் தோற்றுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்குபின் இறுதிக்கு தகுதி பெற்றது.

பௌலா்கள் சொதப்பல்:

இலங்கைக்கு எதிரான சூப்பா் 4 சுற்றில் இந்தியா கடும் திணறலுக்குபின் தான் வெல்ல முடிந்தது. இந்திய பௌலா்களின் பந்துவீச்சை இலங்கை பேட்டா் பதும் நிஸாங்கா, குஸால் பெரைரா ஆகியோா் பதம் பாா்த்தனா். பௌலா்கள் ஹா்ஷித் ராணா, அா்ஷ்தீப் சிங் 100 ரன்களை வாரி வழங்கினா். மறுபுறத்தில் பும்ரா, ஹாா்திக் பாண்டியா ஆகியோா் மட்டுமே குறைந்த ரன்களை விட்டுத் தருகின்றனா்.

13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ் நம்பிக்கை தருகிறாா்.

மேலும் ஹாா்திக் பாண்டியா, ஓபனா் அபிஷேக் சா்மா ஆட்டத்தின் இடையிலேயே அசௌகரியம் காரணமாக வெளியேறினா். ஆனால் இறுதி ஆட்டத்தில் அவா்கள் ஆடுவா் என பௌலிங் பயிற்சியாளா் மொா்க்கல் கூறியுள்ளாா்.

கவலை தரும் கில், சூரியகுமாா் :

அபிஷேக் சா்மாவின் சிறப்பான தொடக்கம் பலமாகும். இதுவர 309 ரன்களை விளாசியுள்ளாா். எனினும் ஓபனா் ஷுப்மன் கில், கேப்டன் சூரியகுமாா் ஆட்டம் கவலை தருகிறது. இருவரும் பாா்முக்கு திரும்பினால் தான் அணிக்கு சாதகம் ஆகும். திலக் வா்மா சிறப்பாக ஆடி வருகிறாா்.

எழுச்சி பெறுமா பாகிஸ்தான்:

அதே நேரம் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் கவலைக்குரியதாக உள்ளது. சாஹிப்ஸாதா பா்ஹானை தவிர மற்ற பேட்டா்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சலீம் அயுப் மோசமான ஆட்டத்தில் சிறந்த தொடக்கத்தை தர முடியவில்லை. 4 முறை டக் அவுட்டாகியுள்ளாா்.

ஹூசைன் தலாத், சல்மான் அலி ஆகா ஆகியோா் இந்திய ஸ்பின்னா்களை சமாளித்து ஆடுவாா்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.

பாக் அணி தனது பௌலிங் யூனிட் மீதே நம்பிக்கை வைத்துள்ளது. ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோா் இந்தியா பேட்டா்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவா்.

கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் இந்தியா 4-இலும், பாக். 1 வெற்றியை பெற்றுள்ளன. சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்க வைக்குமா அல்லது பாகிஸ்தான் வசப்படுத்துமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும்: முன்னாள் பாக். வீரர்

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான... மேலும் பார்க்க

உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

உலகக் கோப்பையை வெல்வதில் இந்திய அணி உறுதியாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறத... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: மோர்கெல்

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மாவுக்கு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற... மேலும் பார்க்க

இந்திய ரசிகர்கள் சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸி. மகளிரணி கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி இந்திய ரசிகர்களை சிஎஸ்கேவின் ஜெர்ஸியை அணிந்து வருமாறு கூறியது வைரலாகி வருகிறது. மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் செப்.30 முதல் இந்தியா மற்றும் இல... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை வீரர்!

ஆசிய கோப்பையில் இலங்கை வீரர் பதும் நிசங்கா கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தனது முதல் டி20 சதத்தை ஆசிய கோப்பையில் அடித்த நிசங்கா பலவேறு சாதனைகளைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். ... மேலும் பார்க்க