கும்பகோணம்: செல்லாத ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம்; நவராத்திரி விழாவில்...
ஆசிய கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை வீரர்!
ஆசிய கோப்பையில் இலங்கை வீரர் பதும் நிசங்கா கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
தனது முதல் டி20 சதத்தை ஆசிய கோப்பையில் அடித்த நிசங்கா பலவேறு சாதனைகளைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
ஆசிய கோப்பை சூப்பர் 4-இல் கடைசி போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின.
முதலில் பேட் செய்த இந்திய அணி 202/ 5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இலங்கை அணியும் 202/5 எடுத்து போட்டி டிரா ஆனது. சூப்பர் ஓவரில் இந்திய அணி எளிதாக வென்றது.
இதில், இலங்கை வீரர் பதும் நிசங்கா 58 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
இதுவரையிலான ஆசிய கோப்பை டி20-யில் அதிகமான ரன்களை குவித்தவராக நிசங்கா வரலாறு படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20-யில் அதிக ரன்கள்
1. பதும் நிசங்கா - 434 ரன்கள்
2. விராட் கோலி - 429 ரன்கள்
3. அபிஷேக் சர்மா - 309 ரன்கள்
4. பாபர் அயாத் - 292 ரன்கள்
5. முகமது ரிஸ்வான் - 281 ரன்கள்