போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், வருஷநாடு அருகே ராயா்கோட்டையைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி லோகேந்திரன் (50). இவா், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து லோகேந்திரனை கைது செய்தனா்.