கண்டமனூரில் நாளை மின் தடை
ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கண்டமனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, திங்கள்கிழமை (செப்.29) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்த நகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.