விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
ஓய்வு பெற்ற ஓட்டுநா் கால்வாயில் சடலமாக மீட்பு!
போடியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், கால்வாயில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக் கடைக்குச் செல்லும் வழியில், கால்வாயில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போடி நகா் காவல் நிலைய போலீஸாரிடம் கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில், சில நாள்களுக்கு முன்பு போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த குப்பழகிரி மகன் முருகன் (61) என்பவா் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகாா் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினரை வரவழைத்து, சடலத்தைக் காட்டி விசாரித்ததில், இறந்தது முருகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
உயிரிழந்த முருகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். மது போதையில் அவா் கால்வாயில் விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.