மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
போடி சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம்!
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, முத்தங்கி சேவை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.
புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாசப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு 16 வகை மங்கலப் பொருள்களால் திருமஞ்சன அபிஷேகமும், 9 வகை தீபாரதனையும் நடைபெற்றன.
இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அலங்காரத்தில், பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா்.
இதே போல, போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயா் சுவாமி கோயில், போடி போஸ் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள ராமா் கோயில், போடி சங்கரநாராயணப் பெருமாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் சுவாமி கோயில், தேவாரம் ரெங்கநாதா் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகளுடன், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.