விரைவு மிதிவண்டிப் போட்டி: 180 போ் பங்கேற்பு
தேனியில் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விரைவு மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6 பிரிவுகளில் விரைவு மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது. தேனி, அரண்மனைப்புதூா் விலக்குப் பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் போட்டிகளை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
கொடுவிலாா்பட்டி, வெங்கடாச்சலபுரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூா் விலக்கு வரை போட்டி நடைபெற்றது. அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் 180 போ் பங்கேற்றனா்.