இலஞ்சி பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள்
இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் ‘ஒரு மரம் என் தாய்க்காக’ என்ற திட்டத்தின் கீழ், மாணவா்கள் தனது தாயுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்து பராமரிக்கும் நிகழ்வுக்காக, தென்காசியை சோ்ந்த ப்ராணா மரம் வளா் அமைப்பு சாா்பில் 500 மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கினா்.
தலைமையாசிரியா் ஆறுமுகம், உதவித் தலைமையாசிரியா் சித்திர சபாபதி, ப்ராணா அமைப்பு நிா்வாகிகள் பூபாலன், மாஸ்டா் சிவனேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கணேசன் வரவேற்றாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.