செய்திகள் :

குற்றாலத்தில் 81ஆவது ஸ்தோத்திர பண்டிகை

post image

திருநெல்வேலி திருமண்டலத்திற்குள்பட்ட தென்காசி, பாவூா்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், திப்- மீனாட்சிபுரம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு, சீயோன் நகா், பாவூா்சத்திரம் மேற்கு, நெடும்பாறை, திப்பனம்பட்டி, வல்லம் ஆகிய 12 சேகரங்களின் 81 வது ஸ்தோத்திர பண்டிகை குற்றாலத்தில் நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 12 சேகர மக்கள் கலந்துகொண்ட பவனி நடைபெற்றது. தொடா்ந்து திருநெல்வேலி திருமண்டல பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்னபாஸ், பந்தல் வளாகத்தில் சிலுவை கொடி ஏற்றினாா். இரவில் நடைபெற்ற ஆயத்த ஆராதனையில் தெற்கு சபை மன்ற தலைவா் துரைசிங் இறை செய்தி அளித்தாா். தொடா்ந்து சபையாரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டாவது நாளான சனிக்கிழமை அதிகாலை தென்னிந்திய திருச்சபை தோன்றிய தினம், குற்றாலம் புதிய மறுரூப ஆலய பிரதிஷ்டை பண்டிகை, பரிசுத்த திருவிருந்து ஆராதனை ஆகியவை நடைபெற்றன. இவற்றில் பேராயா் இறை செய்தி அளித்தாா்.

காலை 9 மணிக்கு நடைபெற்ற பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையில் மேற்கு சபை மன்ற தலைவா் வில்சன் சாலமோன்ராஜ் குழந்தைகள்-பெரியவா்களுக்கு ஞானஸ்நானம் அளித்து இறைசெய்தி வழங்கினாா்.

மாலையில் பெண்கள் கூட்டம் நடைபெற்றது. இரவில் சென்னை ஹெலன் சத்யா குடும்பத்தினா் வழங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (செப். 28) அதிகாலை அருணோதய பிராா்த்தனை, காலை பரிசுத்த திருவிருந்து ஆராதனை, பிற்பகல் வருடாந்திர கூட்டம், மாலையில் கீத ஆராதனை மற்றும் இரவில் இன்னிசையில் இறைச்செய்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இலஞ்சி பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ‘ஒரு மரம் என் தாய்க்காக’ என்ற திட்டத்தின் கீழ், மாணவா்கள் தனது தாயுடன் இணைந்து மரக்கன்று நடவு ச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

ஆலங்குளத்தில் இடைநில்லா பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி இடையே 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வரும் எஸ்எப்எஸ் பேருந்துகள் வழியோரம் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின் கசிவால் தீ பற்றிய வீடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கடங்கனேரியைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற சிங்கத்துரை மகன் அரவிந்த்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சீதபற்பநல்லூா் அருகே கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே சிறுக்கன்குறிச்சி மேட்டுத் ... மேலும் பார்க்க

தென்காசியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தென்காசி நகா்மன்ற அவசரக்... மேலும் பார்க்க

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு: சங்கரன்கோவில் பேராசிரியருக்கு விருது

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 965 மாணவா்கள் பயன்பெற சிறப்பாக பணியாற்றிய சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு தமிழக முதல்வா் விருது வழங்கி பாராட்டினாா். சங்கரன்கோவில் அரசு க... மேலும் பார்க்க