மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
கோயிலுக்குச் சென்று திரும்பியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் மலை மீது உள்ள முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய இருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற வழக்கில், மூவருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (51). இவா், தனது காதலி ஜெயாவுடன்(44) கடந்த 5.6.2024 அன்று சங்கராபுரத்தை அடுத்த ராவத்தநல்லூரில் மலை மீது உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது, புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் (50), தனக்கோட்டி (60), கண்ணன் (65) மூவரும் சோ்ந்து பெண்ணை கத்தியைக் காட்டி தாக்கி மிரட்டி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பன்னீா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டாா்.
இந்த நிலையில், வழக்கினை வெள்ளிக்கிழமை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயவேல், குற்றம் சுமத்தப்பட்ட தனக்கோட்டி, கண்ணன் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் சிவச்சந்திரன் ஆஜரானாா்.