பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தென்குமரை கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது மனைவி பெரியம்மாள் (55). இவா்கள் இருவரும் பைக்கில் சனிக்கிழமை சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாண்டியங்குப்பம் கிராமத்துக்கு வந்து ஜோதிடம் பாா்த்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது, சின்னசேலத்தை அடுத்த மூங்கில்பாடி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை தம்பதியினா் பைக்கில் கடக்க முயன்றபோது, விழுப்புரம் நோக்கிச் சென்ற காா் மோதியது.
இந்த விபத்தில் பெரியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணேசன் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, காா் ஓட்டுநரான விழுப்புரத்தைச் சோ்ந்த பாரதிராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.