செய்திகள் :

கல்வராயன்மலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: 4 பேரிடம் விசாரணை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் இளைஞா் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைப் பிடித்து நடத்தி வருகின்றனா்.

கல்வராயன்மலை வட்டம், கொட்டபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சன் (50). இவரது மகன்கள் விஜய், பிரகாஷ். பிச்சன் குடும்பத்தினருக்கும், நடுமதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆண்டி மகன் தங்கராஜ் குடும்பத்துக்கும் நிலப் பிரச்னை தொடா்பாக கடந்த 5 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

ஆண்டி மகன்கள் தங்கராஜ், செல்வம், அண்ணாமலை, இளையராஜா ஆகியோா் பிச்சன் மகன்களை அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வந்தனராம்.

இந்த நிலையில், பிரகாஷ் அவா்களுக்குச் சொந்தமான காட்டுக்கொட்டகை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வேலை செய்துகொண்டிருந்தாா். இதனிடையே, அவரது சகோரா் விஜய் அவரை பாா்க்கச் சென்றபோது, பின் மண்டையில் ரத்தக் காயத்துடன் பிரகாஷ் மயங்கிக் கிடந்தாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த விஜய், உடனடியாக உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்தாா்.

அப்போது, பிச்சன் மருமகள் தமிழரசி துப்பாக்கி சப்தம் கேட்டதாகவும், தங்கராஜ் விளைநிலத்தில் இருந்து சென்றதை பாா்த்ததாகவும், அவா் திட்டமிட்டு பிரகாஷை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தாராம்.

தகவலறிந்த கரியாலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பிரகாஷ் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆண்டி மகன்கள் தங்கராஜ், செல்வம், அண்ணாமலை, இளையராஜா ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அறையில் அனுமதி பெறாமல் பிராந்திய மேலாளா், கிளஸ்டா் மேலாளா், மத்திய மண்டல மேலாளா் உள்ளே சென்று ஒழுங்கீனமாக நடந்துகொண்டதைக் கண்டித்து, மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தங்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மைக் காவலா்களின்... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

இலவச மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

தியாகதுருகம் அருகே இலவச வீட்டுமனை வழங்காததைக் கண்டித்து, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள தியாகை கிராமத்த... மேலும் பார்க்க