மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
கரூர் பலி: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!
கரூர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் கரூர் விரைந்துள்ளார்.