செய்திகள் :

கரூர் தவெக கூட்ட நெரிசல்: ``இழப்பீடு போதாது இன்னும் அதிகரிக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை!

post image

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.

தவெக விஜய் சுற்றுப்பயணம்
தவெக விஜய் சுற்றுப்பயணம்

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் எக்ஸ் பக்கத்தில்,

``தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலால் ஆழ்ந்த வருத்தம்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

இந்த துயரமான நேரத்தில் கேரளா தமிழக மக்களுடன் நிற்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில்,

``தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைப் பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.

கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும்.

மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. 

திருமாவளவன்

அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது.

எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

கரூர்: ``அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் மருத்துவமனை சென்று உதவுவார்'' - எடப்பாடி பழனிசாமி

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையைக் காண ஏகப்பட்ட மக்கள் கூடியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மிகவும... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் துயர சம்பவம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் கேள்விகள் என்ன?

தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திரைக... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - செல்வப்பெருந்தகை கோரிக்கை

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு - விஜய் மீது எஃப்.ஐ.ஆர்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது. தற்போது வரை கிடை... மேலும் பார்க்க

'இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே; படிச்சி படிச்சி சொன்னாங்களே'- கதறி அழுத அன்பில் மகேஷ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 35-க்கும்... மேலும் பார்க்க