செய்திகள் :

கரூர் தவெக கூட்ட நெரிசல் துயர சம்பவம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் கேள்விகள் என்ன?

post image

தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

``திரைக் கலைஞர் விஜய் இன்று (27.09.2025) மாலை கரூர் நகரில் தெருவழிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

அவரது பரப்புரை நிகழ்வில் பங்கேற்கவும், அவரை நேரில் காணவும் திரண்ட மக்கள் கூட்ட நெரிசலில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வரும் துயரச் செய்தி நெஞ்சைப் பிளக்கும் வேதனையளிக்கிறது.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

மேலும் பலர் மயங்கி விழுந்த நிலையில் அரசு மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்த முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் தடையின்றி கிடைக்க உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம் என முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இருப்பினும் விஜய் தெருவழிப் பரப்புரைக்கு காவல்துறை வழங்கிய இடம் பொருத்தமானதா? கூட்டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்பிடப்பட்டதா? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.

இவை குறித்து முழுமையான விசாரணை நடத்துவது அவசியமாகும். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைப் பொறுப்பாகும்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய் - திருவாரூர்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

உயிரிழந்தோர் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்திக்க கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் முன்னணி நிர்வாகிகள் நாளை (28.09.2025) கரூர் மாநகருக்குச் செல்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

கரூர்: ``அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் மருத்துவமனை சென்று உதவுவார்'' - எடப்பாடி பழனிசாமி

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையைக் காண ஏகப்பட்ட மக்கள் கூடியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மிகவும... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - செல்வப்பெருந்தகை கோரிக்கை

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு - விஜய் மீது எஃப்.ஐ.ஆர்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது. தற்போது வரை கிடை... மேலும் பார்க்க

'இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே; படிச்சி படிச்சி சொன்னாங்களே'- கதறி அழுத அன்பில் மகேஷ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 35-க்கும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: `அதிர்ச்சி சம்பவம்; முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்'- நயினார் நாகேந்திரன், தமிழிசை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து... மேலும் பார்க்க