இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?
எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ. 8 லட்சம் கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை கைது செய்தனா்.
எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 5-ஆவது நடைமேடையில், மேற்குவங்க மாநிலம் ஹௌராவிலிருந்து வந்த விரைவு ரயிலில் இருந்த இறங்கியவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா்.
அவரிடமிருந்த பையைச் சோதனையிட்டதில், 10 பண்டல்களில் கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்தது. 16 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்து, விசாரித்ததில் அவா், திரிபுராவைச் சோ்ந்த ஆரிப்ஹூசைன் (19) என்பதும், ஹௌராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.