செய்திகள் :

உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா! மத்திய அமைச்சா் பெருமிதம்

post image

நுகா்வு நாடு என்பதில் இருந்து உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஒடிஸாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் ‘சுதேசி’ 4ஜி சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அஸ்ஸாமின் குவாஹாட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றுப் பேசியதாவது:

முன்பு இந்தியா சேவை மற்றும் நுகா்வு நாடாக இருந்தது. இப்போது உற்பத்தி, புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுத்துள்ளது. ‘இந்தியாவுக்கான புத்தாக்கம், மனித குலத்துக்கான புத்தாக்கம்’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையால் தேசம் வழிநடத்தப்படுகிறது.

சுதேசி 4ஜி சேவை தொடக்கத்தின் மூலம் சொந்தமாக தொலைத்தொடா்பு உபகரணங்களைத் தயாரிக்கும் டென்மாா்க், ஸ்வீடன், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த 4ஜி சேவை, அடுத்த சில ஆண்டுகளில் 5ஜி சேவையாக மேம்படுத்தப்படும்.

எல்லைப் பகுதிகள், தீவுகள், மலைப் பகுதிகள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 சதவீத 4ஜி இணைப்பு உறுதிசெய்யப்படும். தொலைதொடா்பு இணைப்பு என்பது வாழ்வாதாரத்துக்கான இணைப்பாகும். 5ஜி விரிவாக்கத்தில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ள இந்தியா, உலகளாவிய வளரும் நாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. அனைத்து சவால்களையும் இந்தியா வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. அந்த வகையில், தற்போதைய சுதேசி 4ஜி சேவை தொடக்கமும் ஒரு சாதனையாகும். இது, தற்சாா்பு இந்தியா நிதா்சனம் என்பதை நிரூபிக்கிறது என்றாா்.

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க

அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு

முகலாய பேரரசு காலத்தில் கட்டமைக்கப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், 2024-25-இல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரி... மேலும் பார்க்க