விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
கரூர் பலி: கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் இரங்கல்!
கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களுக்கு கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39-ஐ தொட்டுவிட்டது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. பலருக்கு கயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய அளவில் பல தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டுமில்லாது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர்கள் ஜெ. பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.