கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு - விஜய் மீது எஃப்.ஐ.ஆர்
இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது.
தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி, இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தினால் தற்போது போலீசார் விஜய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
சென்னை திரும்புவதற்காக திருச்சி சென்ற விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.