இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?
'இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே; படிச்சி படிச்சி சொன்னாங்களே'- கதறி அழுத அன்பில் மகேஷ்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 35-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலைமை ஆபத்தானதாக இருப்பதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.
இந்நிலையில் மக்களைப் பார்க்க நேரில் சென்ற அன்பில் மகேஷ் கண்ணீர்விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

" இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே..! படிச்சி படிச்சி சொன்னாங்களே.. கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா..! ஃபாலோ பண்ணுங்கடானு..." என்று அன்பில் மகேஷ் சொல்லி கதறி அழுதிருக்கிறார்.