கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்!
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் சடலங்களைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டழுதார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது பலியானவர்களின் சடலங்களைக் கண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் விட்டழுதார். அவருக்கு செந்தில் பாலாஜி ஆறுதல் கூறும் விடியோ வைரலாகி வருகின்றது.
கரூர்: உயிரிழந்தவர்களை பார்த்து கதறி அழுத மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி.#Karur@Anbil_Maheshpic.twitter.com/dmbe7wykBs
— MOHAN K DMK NKL (@20101976M) September 27, 2025