செய்திகள் :

கரூர்: ``நெரிசலில் சிக்கி உயிரிழப்பு, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' - அன்புமணி ராமதாஸ்

post image

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 33-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பரப்புரை
விஜய் பரப்புரை

அந்தவகையில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், " கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும்.

கரூர்
கரூர்

கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு - விஜய் மீது எஃப்.ஐ.ஆர்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது. தற்போது வரை கிடை... மேலும் பார்க்க

'இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே; படிச்சி படிச்சி சொன்னாங்களே'- கதறி அழுத அன்பில் மகேஷ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 35-க்கும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: `அதிர்ச்சி சம்பவம்; முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்'- நயினார் நாகேந்திரன், தமிழிசை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல்: ``இழப்பீடு போதாது இன்னும் அதிகரிக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை!

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்... மேலும் பார்க்க

கரூர்: ``வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்'' - விஜய் செல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

கரூர் தவெக கூட்ட நெரிசல்: ``கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது" - சீமான்

தவெக தலைவர் விஜய்-ன் அரசியல் பரப்புரை கரூரில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். பலர... மேலும் பார்க்க