தலைமைச் செயலகத்தில் முதல்வர்! அவசர ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகம் விரைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு விரைந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்த முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுமாறு உத்தரவிட்டார்.
நாளை கரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார்.