செய்திகள் :

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

post image

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே நடந்த தவெகவின் 4 கூட்டங்களைப் பார்த்து அதற்கேற்றவாறு முழுமையான பாதுகாப்பை அரசும் காவல் துறையும் கொடுத்திருக்க வேண்டும்.

அதேபோல் அதிமுகவின் எழுச்சிப் பயணித்தின்போதுகூட முழுமையான பாதுகாப்பை அரசு கொடுக்க வில்லை. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலாசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, காவல் துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கவனக்குறைவாக செயல்பட்ட தமிழக அரசு, காவல்துறைக்கு கண்டனம்: அண்ணாமலை

அதிமுக ஆட்சியில் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டம் நடத்துவதே மிகவும் சிரமம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே கூட்டம் நடத்த முடிகிறது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மெரினாவில் ஏர் ஷோவின் போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படாததால் 5 பேர் பலியாகினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Former CM Edappadi Palaniswami cites security lapses by police and administration behind Karur TVK rally stampede, urging preventive measures to avoid future tragedies.

கரூர் பலி 40ஆக உயர்வு

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின்(39) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். கரூரில் தமிழக வெற்றிக் கழ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: நாளை நீதிமன்ற விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி த... மேலும் பார்க்க

கரூர் மாவட்டத்தில் 15,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட... மேலும் பார்க்க

கரூர் விஜய் பிரசாரத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 2 பேர் பலி!

வெள்ளக்கோவில்: கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர்... மேலும் பார்க்க

தவெகவின் மோசமான அரசியலை ஆதரிக்கும் அதிமுக: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தவெகவின் மோசமான அரசியலை அதிமுக ஆதரிப்பதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்... மேலும் பார்க்க