செய்திகள் :

கரூர்: ``ஆம்புலன்ஸ் வந்ததால்தான் பிரச்னையே" - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?

post image

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு துயரமான, இவ்வளவு உயிர்கள் பலியான சம்பவம் இதுதான் முதல் முறை.

தவெக விஜய் சுற்றுப்பயணம்
தவெக விஜய் சுற்றுப்பயணம்

சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களை நேரில் சந்திக்கச் செல்கிறேன். விஜய் பரப்புரை நிகழ்த்திய பகுதி குறுகலான பாதையாகத்தான் தெரிகிறது.

அந்த இடம் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு போதாது. ஏன் இப்படியான இடத்தை தேர்வு செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்திற்கு, காவல்துறை பாதுகாப்பும் மிக குறைவாக இருந்தது. கரூர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

ஆம்புலன்ஸ் அந்த கூட்டத்திற்கு மத்தியில் வந்த பிறகுதான் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்கிறது. இந்த சூழலில் அரசியல் பேசுவதை விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டனுடன் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். பெரிய பெரிய கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடந்ததில்லை.

குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் என பலதரப்பிலிருந்து மரணம் நிகழ்ந்து இருக்கிறது. எல்லோருக்கும் மன வேதனையான சூழல்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிற... மேலும் பார்க்க

கரூர்: ``படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்'' - சீமான்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?

நேற்று கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்திருந்தனர்... காயமடைந்திருந்தனர். இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க

கரூர்: ``விஜய் களத்துக்கே இன்னும் வரவில்லை" - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல... மேலும் பார்க்க

கரூர்: 'அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..' - உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்

கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன... மேலும் பார்க்க