கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம...
கரூர்: 'ஆனந்த் மீது FIR, விஜய்க்கு துணை ராணுவப் பாதுகாப்பு' - சட்ட நடவடிக்கைகள் அப்டேட்
நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
இவரைக் காண ஏராளமான மக்கள் திரள கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து FIR பதியப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நீலங்கரையில் உள்ள விஜய் வீட்டு வாசலில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது துணை ராணுவப் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. 5 துணை ராணுவ வீரர்கள் தற்போது விஜய் வீட்டிற்கு வந்துள்ளனர்.
'விஜய் கைது செய்யப்படுவாரா?' என்ற கேள்விக்கு, 'அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க தயாராக இல்லை. அறிக்கையின் படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.