மெஸ்ஸி வழியில் அல்வரெஸ்..! ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய அத்லெடிகோ!
இனி விஜய்யின் பேச்சு தொடருமா?
கரூர் சம்பவத்தால் விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
இந்த பலிகளுக்கு விஜய்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சியின் மோசமான செயல்பாடுகள்தான் இழப்பிற்குக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதேநேரம், சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்றிருக்க வேண்டிய விஜய் அவசரமாக சென்னை கிளம்பினார். மாநில முதல்வர் சென்னையிலிருந்து கரூர் வந்து பலியானர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதுடன் பத்திரிகையாளர்களையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார்.
ஆனால், விஜய்யிடமிருந்து ஒரு அறிக்கையைத் தவிர வேறு எதுவும் வராதது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கரூரில் நடந்த கோரமான சம்பவத்தைத் தொடர்ந்து இனி விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.
தற்போதைய சூழலில் விஜய் நேரில் சென்றால் மீண்டும் நெரிசல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி பிற பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?