செய்திகள் :

விஜய் வீட்டுக்கு ராணுவ பாதுகாப்பு!

post image

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்தின் எதிரொலியாக சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது கரூர் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, விஜய் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு முதல் காவல் துறை பாதுகாப்பை அதிகரிக்கப்பட்டுள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகத்துக்குரிய வகையில் செல்லும் அனைவரையும் விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டைச் சுற்றிலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகர காவல் துறையினரிடம் இணைந்து 5 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, விஜய் வீட்டுக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!

Paramilitary security has been deployed at the residence of Tvk leader Vijay.

கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர்... மேலும் பார்க்க

தவெகவின் மோசமான அரசியலை ஆதரிக்கும் அதிமுக: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தவெகவின் மோசமான அரசியலை அதிமுக ஆதரிப்பதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்... மேலும் பார்க்க

கரூர் துயரம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை

கரூர் நெரிசலில் சிக்கி பலியானோரின் உடல்களைக் காண முற்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, அப்பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கரூரில் தவெக பிராசாரக் கூட்டத்தில் சிக்கி ப... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து நீ... மேலும் பார்க்க

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தி... மேலும் பார்க்க