இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சிக்கல்! மாற்று வீரர் யார்?
இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை ஹார்திக் பாண்டியா அணியில் இல்லையெனில் யார் அவருக்குப் பதிலாக விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆசிய கோப்பையில் முதல்முதலாக இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
கடைசி சூப்பர் 4 போட்டியின் போது, ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் மட்டுமே வீசினார். தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
ஆசிய கோப்பையில் முதல் ஓவரை ஹார்திக் பாண்டியாதான் வீசி வருகிறார். இந்தியாவிற்காக அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 98 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் இல்லை என்பதுதான் வருத்தமளிக்கும் சூழ்நிலையாக இருக்கிறது.
பேட்டிங் ஆல்ரவுண்டராக ரிங்கு சிங் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.