கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்...
கரூர்: ``திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" - பாதிக்கப்பட்ட நபர்
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.
கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விஜய் வருவதற்கு முன்பே தள்ளு முள்ளு ஆரம்பித்துவிட்டது
இந்தக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் பேசுகையில்,
"விஜய் வருவதற்கு முன்பே தள்ளுமுள்ளு ஆரம்பித்துவிட்டது. அளவுக்கு அதிகமான கூட்டத்தால் எங்கும் நகர முடியாத நிலைமை.
திடீரென 'பாண்டியன்' என்ற ஆம்புலன்ஸ் கூட்டத்தின் குறுக்கே வந்ததும், மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் விலகி நெரிசலால் மூச்சுத்திணற ஆரம்பித்தனர்.
அதோடு திடீரென மின்சாரம் தடைபட இருட்டில் காலடி எடுத்து வைக்க முடியாமல் பலரும் தடுமாறி விழுந்தனர். விழுந்தவர்கள் மீது மக்கள் கூட்டம் ஏறிச் செல்ல, மூச்சுத்திணறலால் பலரும் அவதிப்பட்டு பலியாயினர்.
இதில் சிறு குழந்தைகளும் மாட்டிக்கொண்டது மிகவும் வேதனையானது. விஜய் வருவதற்கு முன்பே இப்படியான சூழல்தான் நடந்தது. அவர் வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமாகி, நிலைமை மோசமாகிவிட்டது" என்று வேதனையுடன் பேட்டியளித்தார்.