செய்திகள் :

கரூர் சோகம்:``நிறைய பேரோட உடல கண்டுபிடிக்கவே முடியல" - நேரில் பார்த்தவர் சொல்வதென்ன?

post image

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக பரப்புரைக் கூட்டம் நடந்த பகுதியில் இருக்கும் நம் செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த செழியன், ``விஜய்யை பார்த்தே ஆவேன்னு என் பையன் நேத்து மதியம் இங்க வந்துட்டான். கூட்டத்துல சிக்கி அவனும் ரொம்ப சிரமப்பட்டிருக்கான்.

தவெக தொண்டர்கள் கூட்டம்
தவெக தொண்டர்கள் கூட்டம்

எப்டியோ தப்பிச்சு வீட்டுக்கு வந்துட்டான். நைட்டு முழுக்க அழுதுக்கிட்டே இருந்தான். அவன் பார்த்த காட்சிகள் அவ்வளவு கொடுமையா இருந்துருக்கு. எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல ஒரு பொண்ணு. ஐ.டி யில வேலை பார்க்குது.

என் தலைவனை பார்த்தே ஆகணும்னு அந்தப் பொண்ணோட அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு வந்துருச்சு. அந்த அம்மாவுக்கு 65 வயசு. கூட்டத்துல அந்த அம்மாவுனால தாக்குப் பிடிக்க முடியல. மூச்சுத்திணறி இறந்துருக்கு. அந்த அம்மாவோட உடலைக் கண்டுபிடிக்கிறதே ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதேமாதிரி, நிறைய பேரோட உடல கண்டுபிடிக்கவே முடியல..." என உடைந்த குரலில் பேசினார்.

கரூர்: "இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான்; இருந்தும்!"- விஜய் அறிக்கை

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர்: விஜய் பரப்புரைஇதனையடுத்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

கரூர்: 'தாங்க முடியாத துயரம் இது'- நடிகர் கார்த்தி இரங்கல்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: 'ஆனந்த் மீது FIR, விஜய்க்கு துணை ராணுவப் பாதுகாப்பு' - சட்ட நடவடிக்கைகள் அப்டேட்

நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். இவரைக் காண ஏராளமான மக்கள் திரள கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து FIR பதியப்பட்டுள்... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede Complete Details | கரூரில் என்ன நடந்தது? | முழுமையான தகவல்கள்

கரூரில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். களத்தில் என்ன நடந்தது? இவ்வளவு பெரிய இ... மேலும் பார்க்க