செய்திகள் :

கரூர்: ``காப்பாத்துங்கனு கத்துனோம்; போலீஸ் கூட உதவிக்கு வரல'' - உயிரிழந்தவரின் குடும்பம்

post image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தின் பகிர்வு...

"என்னோட பேரு அபிநயஶ்ரீ. நாங்க கூட்டத்துக்கு 3.30 மணிக்கு மேலதான் வந்தோம். நாங்க விஜய் பேசுற இடத்துக்கிட்டதான் நின்னுகிட்டு இருந்தோம்.

ஆனா, விஜயை நாங்க பார்க்கல. பார்க்குறதுக்குள்ள எங்களைக் கீழே போட்டு தள்ளிட்டாங்க. அவரு ரெண்டு வார்த்தை பேசும்போதே, நாங்க கீழே, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க'னு கத்திக்கிட்டுதான் இருந்தோமே தவிர, அவரோட பேச்சை கேட்கல... அவரோட முகத்தைக் கூட பாக்கல.

உயிரிழந்தவரின் குடும்பம் | கரூர்
உயிரிழந்தவரின் குடும்பம் | கரூர்

எங்களை யாராலயும் காப்பாத்த முடியல. எல்லாரும் இழுத்துக்கிட்டு தான் இருந்தாங்களே தவிர, எங்களாலயும் வெளிய வர முடியல.

நாங்க எந்திரிச்சப் பிறகு தான், எங்க பெரியம்மா மயக்கம்போட்டு விழுந்தது தெரியும்.

அங்கிருந்த கும்பல் நகர்ந்த அப்புறம் தான், பெரியம்மாவைப் பாத்தோம். எல்லாரும் தூக்குங்க... தூக்குங்கனு சொல்றோம். ஆனா, யாருமே உதவிக்கு வரல.

கொஞ்ச நேரம் கழிச்சு, ரெண்டு மூணு பசங்க வந்து ரோட்டுல தூக்கிட்டு வந்து படுக்க வெச்சாங்க.

கரூர் துயரம்
கரூர் துயரம்

போலீஸ்காரங்க கிட்ட சொன்னாலும், 'சரி.. சரி'னு சொல்லிட்டு போறாங்களே தவிர... அவங்களும் ஒண்ணும் பண்ணல.

ரெண்டு, மூணு பசங்க தான் ஆம்புலன்ஸை கூப்பிட்டு வந்தாங்க. ஆம்புலன்ஸுமே பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிங்க கிட்ட நிக்கல. இப்படி ஒரு உயிரயே எடுத்துட்டாங்க.

வேலுசாமிபுரத்துல இருந்து ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு ஆட்டோகாரங்க ரூ.1,500 கேக்கறாங்க. நாங்க அந்தக் காசைக் கொடுத்து தான் எங்க பெரியம்மா உயிர் போனப்புறம் வந்தோம்."

கரூர்: "இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான்; இருந்தும்!"- விஜய் அறிக்கை

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர்: விஜய் பரப்புரைஇதனையடுத்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

கரூர்: 'தாங்க முடியாத துயரம் இது'- நடிகர் கார்த்தி இரங்கல்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: 'ஆனந்த் மீது FIR, விஜய்க்கு துணை ராணுவப் பாதுகாப்பு' - சட்ட நடவடிக்கைகள் அப்டேட்

நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். இவரைக் காண ஏராளமான மக்கள் திரள கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து FIR பதியப்பட்டுள்... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede Complete Details | கரூரில் என்ன நடந்தது? | முழுமையான தகவல்கள்

கரூரில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். களத்தில் என்ன நடந்தது? இவ்வளவு பெரிய இ... மேலும் பார்க்க