செய்திகள் :

கரூர் விஜய் பரப்புரை: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு?

post image

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை வெளியான தகவல்கள்:

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 13 ஆண்கள், 16 பெண்கள், 10 குழந்தைகள் அடங்குவர்.

இதுவரை இந்த 39 பேரில் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 17 பேர் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர்.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய் பரப்புரை

கூடுதலாக,

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாமக்கல், சேலத்தில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுரையில் இருந்தும் 30 அரசு மருத்துவர்கள், 15 செவிலியர்கள் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட நபர்களில் பெயர் பட்டியல் இதோ...

கரூர்: ``நடுநிலை வேண்டும், இவ்வளவு வேகமா ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் பின்னணி?'' - எடப்பாடி பழனிசாமி

கரூரில் நடந்த துயர சம்பவத்தை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூர் சென்றுள்ளார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும் இருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு நேரி... மேலும் பார்க்க

`கூட்ட நெரிசல், மக்கள் மிதித்ததில் 2 வயது நிரம்பாத குழந்தை உயிரிழப்பு' - கரூர் துயர சம்பவம்

நேற்று நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 1 3/4 வயது குழந்தை உயிரிழந்திருக்கிறது. இந்தக் குழந்தையின் பெயர் குரு விஷ்ணு. இவரது பெற்றோர் விமல், மாதேஸ்வரி. விமலின் அக்கா குரு விஷ்ணுவைப் பரப்புரைக்கு அ... மேலும் பார்க்க

கரூர்: `ஆளே அடையாளம் தெரியல காயமா இருக்கு, ஒருத்தன் போயிட்டான்; இன்னொருத்தன் எங்க?' -கதறும் உறவினர்

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நா... மேலும் பார்க்க

கரூர்: ``அடுத்த மாசம் கல்யாணம்; இப்போ பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருமே இல்லை'' - கதறும் குடும்பம்

அடுத்த மாதம் திருமணமாக இருந்த கரூரைச் சேர்ந்த கோகுலஶ்ரீயும், மதுரையைச் சேர்ந்த ஆகாஷும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையைக் காணச் சென்றுள்ளனர். அங்கே ஏற்பட்ட ... மேலும் பார்க்க

கரூர்: ``காப்பாத்துங்கனு கத்துனோம்; போலீஸ் கூட உதவிக்கு வரல'' - உயிரிழந்தவரின் குடும்பம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தின் பகிர்வு... "என்னோட பேரு அபிநயஶ்ரீ. நாங்க கூட்டத்துக்கு 3.30 மணிக்கு மேலதான் வந்தோம். நாங்க விஜய் பேசுற இடத்துக்கிட்டதான் நின்னுகிட்டு இருந... மேலும் பார்க்க

``சொன்னது 10,000 பேர், வந்தது 25,000+; தண்ணீர், சாப்பாடு இல்லாமல்'' - கரூர் சம்பவம் குறித்து டிஜிபி

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 ப... மேலும் பார்க்க