செய்திகள் :

கரூர் துயரம்: ``இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது" - நடிகர் வடிவேலு, சூரி உருக்கம்

post image

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சூரி
சூரி

நடிகர் சூரி தன் எக்ஸ் பக்கத்தில், ``கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம்.

இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் வடிவேலு, "கரூரில் நடந்த துயரச் சம்பவத்தை கேட்டதிலிருந்து நெஞ்சை உலுக்குகிறது. இறந்துபோன இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பிஞ்சுக் குழ்ந்தைகளை நினைத்து கண்ணீர் சொட்டுகிறது. இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது என தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உதவும் முதல்வரைப் பார்த்து மக்களைப் போல நானும் ஆறுதல் அடைகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர் துயரம்: ``குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்'' - விஜயிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``எப்படி தேற்றுவது தெரியவில்லை, கண்ணீர் முட்டுகிறது'' - சினிமா பிரபலங்கள் இரங்கல்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

Saraswathi: இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்; சகோதரியுடன் அவரே இணைந்து தயாரிக்கிறார்

இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. அடுத்தடுத்து கோலிவுட், டோல... மேலும் பார்க்க

Kalaimamani Awards: ``சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது!" - நெகிழும் விக்ரம் பிரபு

கடந்த 23-ம் தேதி 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு உ... மேலும் பார்க்க

Kushi: ``விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா!'' - ̀குஷி' ரீ ரிலீஸ் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீஸில் அதிரடியாகக் கொண்டாடப்பட்டது. ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்குமா எனப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது. அத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் ... மேலும் பார்க்க

Deva: ``இந்த அங்கீகாரம் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது!'' - ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவா

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார் தேவா. அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தினால்... மேலும் பார்க்க