செய்திகள் :

கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் பலி? மேலும் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

post image

கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் மயக்கமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர்.

இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நிலவரம் குறித்த பேசிய முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா்.

அதன்படி செப்.13-இல் திருச்சி, அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ந்து, இன்று நாமக்கல்லிலும் கரூரிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் நெரிசல் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கரூரில் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

சென்னை புறப்பட்டார் விஜய்!

கரூரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெர... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் முதல்வர்! அவசர ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகம் விரைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில்... மேலும் பார்க்க

நாளை கரூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏராளமானோர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை அங்கு செல்கிறார். 2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்க... மேலும் பார்க்க

கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு!

கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சையளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.Karur st... மேலும் பார்க்க

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன: முதல்வர் ஸ்டாலின்

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப... மேலும் பார்க்க