செய்திகள் :

தொட்டுப் பார்த்தால் கொழுப்பு, வெட்டிப் பார்த்தாலும் ரத்தம்; தாவரத்திலிருந்து இறைச்சியா?

post image

தொட்டுப் பார்த்தால் கொழுப்பு... 

முகர்ந்து பார்த்தால் இறைச்சி வாடை...

வெட்டிப் பார்த்தாலும் ரத்தம்...

ஆனால் இறைச்சி இல்லை...

எப்புர்ரா.....! என்று இருக்கிறதா..?

அதுதான் '3D Plant - based Meat Technology'. முழுக்க முழுக்க தாவரம், காய்கறிகள் மூலம் தாவர இறைச்சி அச்சடிக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி பார்க்கலாம்.

முதலில் இறைச்சிக்குத் தேவைப்படுவது புரதமும் கொழுப்பும் தான். சோயா, பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றிலிருந்து புரதத்தையும் காய்கறிகளில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெயையும் (vegetable oil) எடுத்து பேஸ்ட் போன்று அரைக்கின்றனர். கொழு கொழுவென அரைக்கப்பட்ட பசையை அடுக்கு அடுக்காக இறைச்சியை போன்று அச்சடித்து தருகின்றது 3D பிரிண்டர். அச்சடிக்கப்பட்ட இறைச்சியை தொட்டுப் பார்ப்பதற்கும் முகர்ந்து பார்ப்பதற்கும் ஏன்..சுவைத்தால் கூட இறைச்சி போன்றே இருக்கின்றது. இதைத் தான் 'Plant- based Meat' அல்லது '3d Printed Meat'  என்கிறார்கள். 

அதெல்லாம் சரி. வெட்டிப் பார்த்தாலும் ரத்தம் கூட வருகிறதே. அது எப்படி என்று கேட்கின்றீர்களா? பீட்ரூட் ஜூஸ் போன்ற இயற்கையான நிறப் பொருட்களைக் கொண்டு செயற்கையான ரத்தத்தையும் சோயாவில் இருந்து எடுக்கப்பட்டும் ஹீம் (Soy leghemoglobin ) இறைச்சியை போன்று ரத்த சுவையையும், ரத்த வாசனையையும் கொடுக்கிறது. 

இதைத்தான் 'Plant - based blood' என்கிறோம். 

3D Plant - based Meat Technology
தாவரத்திலிருந்து இறைச்சி

2018, இஸ்ரேலைச் சேர்ந்த 'Eschar Ben-shitrit' மற்றும் 'Adam Lahav' இருவரும் சேர்ந்து முதன்முதலில் 'ரீடிஃபைன் மீட் (Redefine Meat )' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் நோக்கம் என்னவென்றால் மிருகங்களை அறுக்காமல் இறைச்சியை தயாரிப்பதற்காகவும், அதிக புரதம் கொண்ட மாற்று உணவை (alternatives) உலகிற்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.

அதற்குப் பிறகு இஸ்ரேல் நாட்டிலேயே தாவரத்திலிருந்து இறைச்சியை தயாரிக்கும் இரண்டாவது நிறுவனமாக 'சேவர் ஈட் (Savor Eat )' , ஸ்பெயினில் 'நோவா மீட் (NovaMeat )', என்று பல நிறுவனங்கள், பத்து ஆண்டுகளில் உருவாகத் தொடங்கி,  உலகெங்கும் பிரபலமானது '3D Plant - based Meat Technology'.

3D Plant - based Meat Technology
தாவரத்திலிருந்து இறைச்சி

உடலுக்கு ஆரோக்கியமா..?

என்னதான் இறைச்சியைப் போலவே சுவை தந்தாலும் இது இயற்கையானது அல்ல; இது அதிகமாக ப்ராசஸ் செய்யப்பட்ட உணவு  (Ultra - processed food ) என்றும் இதை தொடர்ந்து உட்கொள்வதால் உடல் நலத்தில் விளைவுகள் ஏற்படலாம் எனவும் குற்றம் சாட்டுகின்றனர், பல ஆய்வாளர்கள். அதேபோன்று அனைவருக்கும் இது இறைச்சியின் சுவையைக் கொடுக்கவில்லை எனவும் தாவரத்தை தாவரமாக சாப்பிடுவதே சிறந்தது; தாவரத்தை இறைச்சியாக மாற்றுவதற்கு அதிக செயல்பாடுகள் தேவைப்படுவதால் விலையும் அதிகமாக இருக்கின்றது என பலரும் விமர்சிக்கின்றனர்.

Apple: Iphone 17 Pro Max-ல் எடுக்கப்பட்ட முதல் 3 புகைப்படங்கள் - டிம் குக் வைரல் பதிவு!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9-ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன.ஆனால், வழக்கம் போல தொழில்நுட்ப அளவில் முந்தைய சீரிஸ்களுக்கும் இந்த சீரிஸுக்கும் பெரிய வேறுபாடேத... மேலும் பார்க்க

Ray-Ban Meta: இனி மொபைலே தேவையில்லை; அனைத்துக்குமான AI கண்ணாடி - என்ன விலை?

மெட்டா நிறுவனம் கடந்த புதன் (செப் 17) அன்று புதிதாக இரண்டு ரே-பான் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வலது லென்ஸில் செயலிகள், செய்திகள், அறிவிப்புகள், திசைகளைக் காட்டும் வகையில் திரை (டிஸ்ப்ளே) அ... மேலும் பார்க்க

Google Gemini: "மச்சத்தைக் கூட எப்படி நோட் பண்ணுச்சு?" - Nano Banana AI போட்டோக்களின் அபாயம்|உஷார்

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, போஸ்ட், ஃபேஸ்புக் போஸ்ட், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் எனத் திரும்பிய பக்கம் எல்லாம் இப்போது கூகுள் ஜெமினியின் நேனோ பனானா ஏ.ஐ போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன.இளம்பெண்களும், இளைஞர்களும் ஃ... மேலும் பார்க்க

AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?

ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு. இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் 'சூரியன்' என... மேலும் பார்க்க

Larry Ellison: உலகின் No.1 பணக்காரர்; 81 வயதில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய லேரி எல்லிசன் யார்?

உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்திருக்கிறார் ‘Oracle’ நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன்.2021- ஆம் ஆண்டில் இருந்து டெஸ்லா, ஸ்பேஸ் எ... மேலும் பார்க்க

iPhone Air: ஆப்பிளின் மெல்லிய ஐபோன் வெர்ஷன்; வடிவமைத்த அபிதுர் சவுத்ரி பற்றி தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப திருவிழாவான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது. iPhone Airவழக்கமான ஏர்பட்ஸ், ஆப்பிள் வாட்... மேலும் பார்க்க