கரூர்: ``நெரிசலில் சிக்கி உயிரிழப்பு, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' - ...
கரூரில் விஜய்யே எதிர்பார்க்காத ‘திக்.. திக்... நிமிடங்கள்’ -பிரசாரத்தில் பெருந்துயரம்!
கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 4 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரூரில் தவெக பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள வேலுசாமிபுரத்துக்கு வழக்கம்போல இன்றும்(செப். 27) காலதாமதமாக, சரியாகச் சொல்ல வேண்டுமானால் கடிகாரத்தில் மணி மாலை 7-ஐ நெருங்கும்போது வருகை தந்த விஜய் பிரசாரம் செய்தார்.
விஜய் மைக் பிடித்து பேசியதோ, பத்து நிமிடங்களை நெருங்கியதா என்றால் அது கேள்விக்குறியே? ஆனால், அந்தக் குறுகிய காலத்துக்குள், (அதாவது விஜய்யின் வாகனம் வந்து நின்றது முதல் அவர் வாகனத்தின் மேலே ஏறி, அதன்பின் பேசி முடித்துக் கொண்டு திரும்பியது வரை...) அதற்குள் அந்த இடமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உருமாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அவரை காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த சிலர் மயக்கமடைந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது. இதை மேலே நின்றபடி பேசிக் கொண்டிருந்த விஜய் கவனித்து விட்டார்.
உடனடியாக பேசுவதை நிறுதிக்கொண்டு, அவர் தமது உதவியாளர்களிடமிருந்து தண்ணீர் பாட்டில்களை வாகனத்தினுள் இருந்து எடுத்துவர பணித்தார். அதன்பின், அந்த பாட்டில்களை கூட்டத்தை நோக்கி வீசி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்ய உதவினார். மேலும், ஆம்புலன்ஸ் ஒன்றையும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்குமாறு உதவியாளர்களிடம் அறிவுறுத்தினார். இதனால் சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.
சிறிய இடைவெளிவிட்டு அதன்பின் பேசத்தொடங்கிய விஜய்யின் வாய்ஸ்-இல் ஆரம்பத்தில் இருந்த உத்வேகம் இல்லவேயில்லை. காரணம் அந்த இடத்தில் நிலவிய பரபரப்பான சூழல்... விஜய் இதனை எதிர்பார்த்திருக்கமாட்டார் போலும்..!
இதனிடையே, ஆம்புலன்ஸ் வந்துவிட்டதாக தகவல் வரவே, பேச்சுக்கு மீண்டும் இடைவெளிவிட்டு தமக்கே உரிய பாணியில் அந்த நபரை பத்திரமாக் அழைத்துச்செல்ல வழிவிடுமாறு தொண்டர்களிடம் “கொஞ்சம் வழிவிட்டுடுங்க நண்பா - ஆம்புலன்ஸுக்கு” என்று கேட்டுக்கொண்டார்.
சலசலப்பு சில நிமிடங்களில் மறைந்தது. உடனடியாக மீண்டும் மைக் பிடித்த விஜய், “இப்போது பேசட்டுமா?” என்று கேட்டுக்கொண்டபின் உரையை தொடர்ந்தார். இம்முறை வீச்சு பலமாக இருந்தது எனலம். காரணம், அவர் இப்போது சீண்டியது செந்தில் பாலாஜியை. மறைமுகமாக செந்தில் பாலாஜியை கிண்டலடித்து விமர்சித்த விஜய் “பாட்டிலுக்கு பத்து ரூபா...” என்று ஒரு பாடலைப் பாடி கேலி செய்வார் என அங்கிருந்த எவரும் எதிர்பார்கவேயில்லை எனலாம்.
அத்துடன் நன்றி தெரிவித்துவிட்டு கிளம்ப விஜய் முற்பட்டபோது, சிறுமி ஒருவர் மாயமானதாக திடீரென புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அவர் மைக்கில் ‘9 வயது பெண் சிறுமி மாயமாகிவிட்டார். அவரது பெயரையும் உச்சரித்து அங்குள்ள தமது தொண்டர்கள் தேடிக் கண்டுபிடிக்குமாறு’ கேட்டுக்கொண்டார். அதன்பின்னரே அவர் வாகனத்தின் மேலிருந்து கீழே இறங்கி உள்ளே சென்றார்.
கரூரில் தொண்டர்களை குஷிப்படுத்த விஜய் பேச்சில் உதிர்ந்த ஹைலைட்ஸ் சில...
“இதுதான் உங்க டக் ஆஆ...?”
“துபாய் குறுக்குச்சந்து...”
“11 மணிக்கு பதியேற்றால், 11.05க்கு மணல் கடத்தலில் ஈடுபடலாம் என்றது உங்கள் அமைச்சர்கள்”
“என்ன இது, ஆம்புலன்ஸில் தவெக கொடி இருக்கு...”
“பாட்டிலுக்கு 10 ரூபா...”
இவற்றையெல்லம் விஜய் பேசும்போது ஆரவாரம் மிகுதியாக இருந்தது கவனிக்கத்தக்கது.