கரூர்: ``நெரிசலில் சிக்கி உயிரிழப்பு, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' - ...
‘கொள்ளை கலாசாரத்தில்’ இருந்து இந்தியாவைக் காப்பாற்றியிருக்கும் பாஜக: பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய கொள்ளை கலாசாரத்திலிருந்து நாட்டை பாஜக காப்பாற்றியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஒடிஸாவில் சனிக்கிழமை(செப். 27) நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை சுமத்தினார். நாட்டு மக்களிடமிருந்து கடந்த ஆட்சிக் காலங்களில் கொள்ளையடித்த காங்கிரஸ், குறைந்த வருமானம் உள்ள மக்களிடமிருந்தும்கூட அக்கட்சி வரி விதித்து வசூலித்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால், பாஜக அரசானது தமது கொள்கைகளாலும், அண்மையில் சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்தாலும் ‘இரட்டை சேமிப்பு’, ‘இரட்டை வருவாய்’ ஆகியவற்றை உறுதிசெய்துள்ளது என்றார்.