நக்சல்கள் ஆயுதங்களை விடுத்து சரணடைந்தால் சண்டை தொடராது: அமித் ஷா
எங்களுடைய மகனை நினைத்து பெருமையாக உள்ளது; அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி!
எங்களது மகனை நினைத்து பெருமையாக உள்ளது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
41 ஆண்டுகால ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். டி20 வடிவிலான ஆசிய கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்த நிலையில், எங்களது மகனை நினைத்து பெருமையாக உள்ளது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும். இந்திய அணி நன்றாக விளையாடி ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எங்களுடைய மகன் நாட்டுக்காக விளையாடுவதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம். நாட்டுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அவருக்கு கற்றுக் கொடுத்துள்ளோம் என்றார்.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 309 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Rajkumar Sharma, father of Indian team opener Abhishek Sharma, has said that he is proud of his son.
இதையும் படிக்க: பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது; இளம் ரசிகர்கள் கருத்து!