தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நக்சல்கள் ஆயுதங்களை விடுத்து சரணடைந்தால் சண்டை தொடராது: அமித் ஷா
நக்சல்கள் ஆயுதங்களை விடுத்து சரணடைந்தால் சண்டை தொடராது என்று மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்தார்.
மாவோயிஸ்ட், நக்சல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், ‘நக்சல் இல்லா பாரதம்’ என்ற பெயரில் இன்று(செப். 28) நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்து அமித் ஷா பேசியதாவது: “அண்மையில், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு கடிதம்(நக்சல், மாவோயிஸ்ட் தரப்பால்) எழுதப்பட்டுள்ளது.
அதில், இதுவரை நடந்தவையெல்லாம் ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது. சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், நாங்கள்(நக்சல்கள்) சரணடைய விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சண்டை நிறுத்தம் உடன்படிக்கையாகாது என்று தெரிவிக்கிறேன். காரணம், நீங்கள் சரணடைய விரும்பினால், அதன்பின் எதற்காகச் சண்டை நிறுத்தம்? அது தேவையே இல்லையே.
உங்களிடமுள்ள ஆயுதங்களை விட்டுவிடுங்கள், அதன்பின், ஒரு குண்டுகூட சுடப்படாது. அவர்கள் சரணடைய விருப்பப்பட்டால், சிவப்பு கம்பள வரவேற்பு அவர்களுக்காகக் காத்திருக்கிறது” என்றார்.