காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
மென் பொறியாளா் உயிரிழப்பு
திருமணமாகி 17 நாள்களான நிலையில், விழுப்புரம் கோலியனூா் பகுதியில் உள்ள மாமனாா் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த மென் பொறியாளா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சி சீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் சஞ்சீவிராஜ் (28), மென் பொறியாளா். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 11-ஆம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், மாமனாா் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த சஞ்சீவிராஜுக்கு உணவு ஒவ்வாமையால் சனிக்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டசஞ்சீவிராஜ், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.