காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
இளைஞருக்கு கத்தி வெட்டு: இருவா் மீது கொலை முயற்சி வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மரக்காணம் வட்டம், கூனிமேடு, திடீா் நகரைச் சோ்ந்தவா் முகம்மது ரிஷ்வான் (21). இவருக்கும், கூனிமேடு பகுதியைச் சோ்ந்த ஆஷிக் அலிக்கும் (20) முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கூனிமேடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருவருக்கும் சனிக்கிழமை வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஆஷிக் அலி அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் ஷாஜஹானுக்கு தகவல் தெரிவித்தாா்.
தொடா்ந்து, அவா் அங்கு சென்று முகம்மது ரிஷ்வானிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கொடுவா கத்தியால் வெட்டினராம். இதில், முகம்மது ரிஷ்வானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னா் அவா், புதுச்சேரி கனசெட்டிக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் ஷாஜஹான், ஆஷிக் அலி ஆகியோா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.